நெல்லையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம், பாலக்காடு, போத்தனுர், ஈரோடு, சேலம் வழியாக பாரத தரிசன ரயில்.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தில், சுற்றுலா மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த தலங்களுக்கு மக்களை அழைத்து செல்கிறது.

இந்நிலையில், வருகின்ற டிசம்பர் 20ம் தேதி திருநெல்வேலியில் இருந்து பாரத தரிசன சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, போத்தனுர், ஈரோடு, சேலம் வழியாக குவாலியர் நகரின் அழகிய கோட்டைகளுக்கு அழைத்து செல்கிறது.

மேலும், உலகப்புகழ் பெற்ற கஜூராஹோ சிற்பங்கள், ஜான்சியில் உள்ள கோட்டை மற்றும் கோவில்கள், விதிஷாவில் உள்ள சாஞ்சி ஸ்துாபி, ஹலாலி டேம், போபாலில் பிம்பேட்கா குகை, போஜ்பூர் சிவாலயம் என பல இடங்களை இந்த ரயில் மூலம் சுற்றி பார்க்கலாம்

10 நாட்கள் கொண்ட யாத்திரைக்கு, 10 ஆயிரத்து, 200 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு கோவை ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40655 மற்றும்  82879 31965 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

Destination covered : Gwalior - Khajuraho - Jhansi - Vidisha - Sanchi - Bhopal

Boarding Points:  Tirunelveli, , Nagercoil, Trivandrum  Central  , Kollam , Kottayam , Ernakulam Town , Thrissur, Ottapalam, Palakkad, Podanur, Erode Jn, Salem Jn

Deboarding Points: Salem Jn, Erode Jn, Podanur, Palakkad, Ottapalam, Thrissur, Ernakulam Town, Kottayam, Kollam Jn, Trivandrum Central, Tirunelveli

Package Details

Package Name

Jewels of Madhya Pradesh(SZBD382A)

Destination Covered

Gwalior - Khajuraho - Jhansi - Vidisha - Sanchi - Bhopal

Traveling Mode

Train

Station/Departure Time

Tirunelveli- 03:00 Hrs

Class

Budget

Frequency

20.12.2020

Package Tariff:(Inclusive of GST)

Category

Price Per Pax (5 years & above)

Budget

₹ 10,200/-