தமிழகத்திற்கு கூடுதல் ரயில்கள் இயக்க பல்வேறு ரயில்வே மண்டலங்கள் திட்டம்.


தமிழகத்தில் தற்போது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், சேலம், ஈரோடு, கோவை வழியாக கேரளா மற்றும் கர்நாடகா மநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் வட மாநிலங்களில் உள்ள சில முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மைசூரில் இருந்து தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தென்மேற்கு ரயில்வே திட்டமிட்டு வருகின்றது.

அதே போல ஹைதராபாத்தில் இருந்து சென்னை, திருவனந்தபுரம் மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தென் மத்திய ரயில்வே திட்டமிட்டு வருகிறது. மேலும் நாகர்கோவில் - பெங்களூர் இடையே தென் மத்திய  ரயில்வேக்கு சொந்தமான ரயில் பெட்டிகளை கொண்டு ரயில்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இதே போல மேற்கு ரயில்வே சார்பில் ஹாப்பா - திருநெல்வேலி மற்றும் ஜாம் நகர் - நெல்லை இடையே ரயில்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் மத்திய ரயில்வே மும்பையில் இருந்து நாகர்கோவில் மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கவுள்ளன.

மேற்கொண்ட சிறப்பு ரயில்கள் எதிர் வரும் நாட்களில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.