திருவனந்தபுரத்தில் இருந்து, கோவை, சேலம், பெரம்பூர் வழியாக சில்சாருக்கு, வாராந்திர சிறப்பு ரயில்

அசாம் மாநிலம், சில்சாருக்கு, வாராந்திர சிறப்பு ரயில் இயக்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, சில்சாரில் இருந்து, வரும், 8ம் தேதி (வியாழக்கிழைமைகளில்), இரவு, 8:05க்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் இரவு, 8:40 மணிக்கு, கேரள மாநிலம், திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையம் சென்றடையும்.

மறுமார்கத்தில், திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து, 13ம் தேதி (செவ்வாய்கிழமைகளில்) மாலை, 4:55க்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் இரவு, 7:00 மணிக்கு சில்சார் சென்றடையும்.


நிறுத்தம்

தமிழகத்தில் இந்த ரயில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். 

முன்பதிவு

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.