மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்திய ரயில்வே துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார் !

நவி மும்பையில் இருந்து 87 பிக்-அப் வேன்கள் பங்களாதேஷுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க்கைக் கொண்டிருக்கும் ரயில்வே துறைக்கு டுவிட்டர் பதிவின் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.


மஹிந்திரா குழுமம் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், பங்களாதேஷ் நாட்டிலும் தனது வாகனங்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனையில் ஈடுபடுத்தி வருகின்றது. இங்கு விற்பனைச் செய்வதற்கான மஹிந்திரா பொலிரோ கார்களை இந்திய ரயில்வேத் துறையின் மூலம் மஹிந்திரா நிறுவனம் அண்மையில் அனுப்பி வைத்தது.

இந்த சேவைக்கே ஆனந்த் மஹிந்திரா தனது நன்றியையும், வாழ்த்துக்களையும் இந்திய ரயில்வே துறைக்கு ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். 

மஹிந்திரா நிறுவனம் மட்டுமின்றி நாட்டின் பிற வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளை மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்க ரயில் வழித் தடத்தையேப் பயன்படுத்தி வருகின்றன.

இதற்கிடையில் இன்று நாக்பூரில் இருந்து பங்களாதேஷிற்கு ரயில் மூலம் ட்ராக்டர்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கும் ஆனந்த மஹிந்திரா தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை