சென்னை புறநகரில் இருந்து மதுரை 'தேஜஸ்' ரயிலில் பயணிக்கும் பயணிகள் எழும்பூர் வந்தடைய எதுவாக 'தேஜஸ்' ரயிலின் அட்டவணையில் மாற்றம்.

சென்னை எழும்பூர் - மதுரை இடையே வாரத்தில் 6 நாட்கள்(வியாழன் தவிர) 'தேஜஸ்' சொகுசு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6மணிக்கு புறப்பட்டு பகல் 12:20க்கு மதுரை சென்றடையும்.

அட்டவணை மாற்றம்.

இந்நிலையில் சென்னை புறநகரில் இருந்து இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் எழும்பூர் வந்தடைய எதுவாக இந்த ரயிலின் அட்டவணையில் சிறிய மாற்றத்தை தெற்கு ரயில்வே செய்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு ;

அக்டோபர் 13ம் தேதி முதல், காலை 6.30 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திருச்சி ரயில் நிலையத்துக்கு 10.30 மணிக்கு சென்றடையும். பின்னர் அங்கிருந்து 10.35 மணிக்கு புறப்பட்டு, கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்கு காலை 11.53க்கும் சென்றடையும். பின்னர் அங்கிருந்து 11.55 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு பிற்பகல் 12.50 மணிக்கு சென்றடையும்.

அதே சமயம் மதுரை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலின் அட்டவணையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

பயணிகளின் எதிர்பார்ப்பு

சென்னை புறநகரில் இருந்து திருச்சி மற்றும் மதுரை செல்லும் பயணிகள் இந்த ரயிலை கிண்டி அல்லது தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

The timing of Train No. 02613 Chennai Egmore - Madurai Tejas Special  (6 days a week except Thursdays) are revised as under, with effect from 13.10.2020.

i.e., On and from 13th October 2020, Train No.02613 Chennai Egmore – Madurai will leave Chennai Egmore at 06.30 hrs and reach Tiruchchirappalli at 10.30 hrs. Leaving Tiruchchirappalli at 10.35 hrs, it will reach Kodaikkananal Road at 11.53 hrs. Leaving Kodaikkanal Road at 11.55 hrs, it will reach Madurai at 12.50 hrs.

The departure has been deferred by 30 minutes in order to facilitate passengers residing in far off places in Chennai City to reach Chennai Egmore to take the train early morning.

There is No change in timings of the train in the return direction, from Madurai to Chennai.