கிடப்பில் காரைக்குடி - மதுரை புதிய ரயில்வே வழித்தடம் அமைக்கும் திட்டம் : மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அதிருப்தி

கடந்த 2013-ம் ஆண்டு காரைக்குடியில் இருந்து குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, பட்டமங்கலம், திருக்கோஷ்டியூர், திருப்பத்தூர் போன்ற ஆன்மிகதலங்களை இணைத்து மதுரை செல்லும் வகையில் 88 கிலோமீட்டருக்கு புதிய பாதை அமைக்க ஆய்வு பணி நடைபெற்றது.

மேலும் இப்பகுதிகளில் அதிகளவில் கட்டிடங்கள் இல்லாததால் நிலம் கையகப்படுத்துவதில் சிரமம் இல்லை என ரயில்வே அமைச்சகத்திற்கு சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக மதுரைக்கு புதிய ரயில்வே வழித்தடம் அமைக்க ஆய்வுப் பணி மட்டும் நடந்தது.

அதன்பிறகு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இத்திட்டம் குறித்து கடந்த ஆண்டே தங்களிடம் வலியுறுத்தினேன்.

இத்திட்டத்தை செயல்படுத்தினால் திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் இருந்து கல்வி, மருத்துவத்திற்காக மதுரை செல்லும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். என்று அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.