பாம்பன் ரயில் பாலம் விரிசல் குறித்து சென்னை ஐ.ஐ.டி., பொறியாளர்கள் இன்று(அக். 6) ஆய்வு செய்யவுள்ளனர்

நுாற்றாண்டு கண்ட பாம்பன் ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் மேல்புறத்தில் அக்.,3 ல் ஏற்பட்ட லேசான விரிசல் குறித்து, அங்கு பொருத்தியுள்ள சென்சார் கருவியில் தெரிந்தது.

இதனால் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்த ரயில் பெட்டிகள் பயணிகளின்றி மண்டபம் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. 

இதனை தொடர்ந்து அக்.,4ல் துாக்கு பாலத்தை ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்த நிலையில், இன்று சென்னை ஐ.ஐ.டி.,யின் இரும்பு கட்டுமான பொறியாளர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

அதிகாரிகளின் ஆய்வுக்குப்பின் பாம்பன் பாலத்தில் எவ்வித பிரச்னையும் இல்லை என்று தெரியவந்தால் மீண்டும் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்கப்படும். இல்லாவிட்டால் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு செல்வது தொடரும்.