விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கிசான் சரக்கு ரயில் போக்குவரத்தில் குறிப்பிட்ட காய்கறி மற்றும் பழங்களுக்கு 50 சதவீத மானியம்

கிசான் ரயில் சேவையை பயன்படுத்தும் விவசாயிகளை மேலும் ஊக்கப்படுத்தும்  வகையில், மத்திய ரயில்வே அமைச்சகமும், உணவு பதப்படுத்துதல் அமைச்சகமும் இணைந்து குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு 50 சதவீத மானியம் அளிக்கவிருக்கிறது. இந்த மானியத் தொகையை உணவு பதப்படுத்துதல் அமைச்சகம், ரயில்வே அமைச்சகத்திற்கு வழங்கும்.

இந்த மானியத் திட்டம், அக்டோபர் 14ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

மானியம் பெற தகுதியுள்ள பொருட்கள்:

பழங்கள்- மாம்பழம், சாத்துக்குடி வாழைப்பழம், கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு, எலுமிச்சை, லிச்சி, கிவி, அன்னாசி மாதுளை, பலாப் பழம், பேரிக்காய், ஆப்பிள் மற்றும் பாதாம் பழம்

காய்கறிகள்: பீன்ஸ், பாகற்காய், கத்திரிக்காய், குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி

வேளாண் அமைச்சகம் அல்லது மாநில அரசுகளின் கோரிக்கையை பரிசீலித்து, எதிர்காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.