கொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும், ரயில் சேவை இன்னும் முழு அளவில் தொடங்கப்படவில்லை.
எனினும், சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மேலும் 39 சிறப்பு ரயில்களை இயக்க அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதில், தமிழகத்துக்கும் தமிழகத்துக்குள்ளும் 7 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு ;
ரயிலின் பெயர் | சேவை |
---|---|
22807/22808 சந்தரகாச்சி 🔄 சென்னை சென்ட்ரல் குளிர்சாதன ரயில் | வாரம் இருமுறை |
20601/20602 சென்னை சென்ட்ரல் 🔄 மதுரை குளிர்சாதன ரயில் | வாரம் மும்முறை |
12269/12270 சென்னை சென்ட்ரல் 🔄 டெல்லி நிஜாமுதின் குளிர்சாதன ரயில் | வாரம் இருமுறை |
12028/12029 பெங்களூர் 🔄 சென்னை சென்ட்ரல் சதாப்தி | வாரத்தில் 6 நாட்கள் - செவ்வாய் தவிர |
12243/12244 சென்னை சென்ட்ரல் 🔄 கோயம்புத்தூர் சதாப்தி | வாரத்தில் 6 நாட்கள் - செவ்வாய் தவிர |
22625/22626 சென்னை சென்ட்ரல் 🔄 பெங்களூர் இரட்டை அடுக்கு | தினசரி |
22863/23864 ஹௌரா 🔄 யஸ்வந்த்பூர் குளிர்சாதன ரயில் | வாராந்திர |
மேற்கொண்ட சேவைகளை இயன்றளவு விரைவில் தொடங்க ரயில்வே மண்டலங்களுக்கு, ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.