பொது முடக்கத்திற்கு முன்னர் இருந்ததைப் போல ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் இரண்டாவது முன்பதிவு பயணிகளின் பட்டியல் வெளியிடப்படும் - ரெயில்வே அமைச்சகம்


இந்திய ரயில்வே வரும் 10ஆம் தேதி முதல், முன்பு இருந்ததை போல, இரண்டாவது முன்பதிவு பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளது.

கொவிட் காலத்திற்கு முன்பு,  ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்பு முதல் முன்பதிவு பட்டியல் தயார் செய்யப்படும். இதனை அடுத்து இரண்டாவது பட்டியல் தயார் செய்யும் வரை காலியான இடங்கள் ஆன்லைன் மூலமாகவோ, பயணச்சீட்டு மையங்கள் வாயிலாகவோ நிரப்பப்படும்.

இரண்டாவது பட்டியல் ரயில் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்களிலிருந்து அரைமணி நேரத்திற்குள் தயாரிக்கப்படும். பயணிகள் ஏற்கனவே முன்பதிவு செய்த  சீட்டுகளை இந்த காலத்திற்குள் ரத்து செய்து கொள்ளலாம்.

எனினும் இந்த கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக, ரயில் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு இரண்டாம் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

மண்டல ரயில்வேக்களின் கோரிக்கையை ஏற்றும், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும், வரும் பத்தாம் தேதி முதல் முன்பைப் போலவே ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் முன்னதாக இரண்டாவது முன்பதிவு பட்டியல் தயார் செய்யப்படும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இரண்டாவது முன்பதிவு பட்டியல் வெளியிடப்படுமுன், ஆன்லைனிலும், பயணச்சீட்டு மையங்களிலும் பயணச்சீட்டை  பதிவு செய்து கொள்ளலாம்.


Indian Railways has decided to restore earlier system of preparation of second reservation charts w.e.f. 10.10.2020.

As per established pre COVID period instructions, the first reservation chart was prepared at least 4 hours before scheduled departure of train. Thereafter, the available accommodation could be booked across PRS counters as well as through internet on first-come-first-serve basis till preparation of second reservation charts.

Second reservation charts were prepared between 30 minutes to 5 minutes before scheduled/rescheduled time of departure of trains. Cancellation of already booked tickets was also permitted during this period as per provisions of Refund Rules.

Due to pandemic, instructions were issued to shift the time of preparation of second reservation chart to 2 hours before scheduled/ rescheduled time of departure of trains.

As per request of Zonal Railways for ensuring convenience of rail passengers, the matter has been examined and it has been decided that the second reservation chart shall be prepared at least 30 minutes before scheduled/rescheduled time of departure of train.

Accordingly, ticket booking facility, both online and on PRS ticket counters, shall be available, before preparation of second chart.

CRIS has been issued necessary modifications in the software accordingly so as to restore this provision w.e.f. 10.10.2020.