நாடு முழுவதும் 254 ஜோடி பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றி இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டம் ! : தமிழகத்தில் மாற்றி அமைக்கப்படவுள்ள பயணிகள் ரயில்களின் விவரம்

விரைவு ரயிலாக மாற்றப்படும் பயணிகள் ரயில்களில் பயணிக்க பயணிகள் கூடுதலாக 15 முதல் 25 வரை செலவிட வேண்டி வரும்.

200 கிலோ மீட்டருக்கு மேல் இயங்கக்கூடிய பயணிகள் ரயில்களை அதன் வேகத்தை அதிகரித்து மற்றும் தேவையற்ற நிறுத்தங்களை நீக்கி விரைவு ரயில்களாக இயக்க ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்திருந்தது.

இதன்படி தெற்கு ரயில்வேயில் 34 ரயில்களை அதன் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை குறைத்து, புதிய பயண அட்டவணை தயார் செய்யுமாறு தெற்கு ரயில்வே உட்பட நாட்டின் அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டிருந்தது.

நாடு முழுவதும் உள்ள 17 ரயில்வேகளில் இயங்கும் 508 பயணிகள் ரயிலை விரைவு வண்டிகளாக மாற்றி ஜுன் 19ம் தேதிக்குள் முடிவெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இயங்கி வரும் சில பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்ற தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு : (தற்போதைய பயண நேரத்தில் இருந்து குறைக்கப்படும் பயண நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது)

1. 56304 நாகர்கோவில் - கோட்டயம் பயணிகள் ரயில்.

இந்த ரயிலின் பயண நேரம் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16309 நாகர்கோவில் - கோட்டயம் விரைவு ரயிலாக இயங்கும்.

2. 56319/56320 நாகர்கோவில் ⇄ கோயம்பத்தூர் பயணிகள் ரயில்.

இந்த ரயிலின் பயண நேரம் 55 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16321 நாகர்கோவில் - கோயம்பத்தூர் விரைவு ரயிலாக இயங்கும். மறுமார்கத்தில் 56320 கோயம்பத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயிலின் பயன் நேரம் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16322 கோயம்பத்தூர் - நாகர்கோவில் விரைவு ரயிலாக இயங்கும்.

3. 56323/56324 கோயம்பத்தூர் ⇄ மங்களூர் பயணிகள் ரயில்.

இந்த ரயிலின் பயண நேரம் 25 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16323 கோயம்பத்தூர் - மங்களூர் விரைவு ரயிலாகவும், மறுமார்கத்தில் பயண நேரம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16324 மங்களூர் - கோயம்பத்தூர் விரைவு ரயிலாகவும் இயங்கும்.

4. 56550/56551 கண்ணூர் ⇄ கோயம்பத்தூர் பயணிகள் ரயில்.

இந்த ரயிலின் பயண நேரம் 25 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16607 கண்ணூர் - கோயம்பத்தூர் விரைவு ரயிலாகவும், மறுமார்கத்தில் பயன் நேரம் 35 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16608 கோயம்பத்தூர் - கண்ணூர் விரைவு ரயிலாகவும் இயங்கும்.

5. 56700/56701 மதுரை ⇄ புனலூர் பயணிகள் ரயில்.

இந்த ரயிலின் பயண நேரம் 50 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16729 மதுரை - புனலூர் விரைவு ரயிலாகவும், மறுமார்கத்தில் பயண நேரம் 110 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16730 புனலூர் - மதுரை விரைவு ரயிலாகவும் இயங்கும்.

6. 56712/56713 பாலக்காடு டவுன் ⇄ திருச்சி பயணிகள் ரயில்.

இந்த ரயிலின் பயண நேரம் இரு மார்க்கத்திலும் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16843/16844 பாலக்காடு டவுன் ⇄ திருச்சி விரைவு ரயிலாக இயங்கும்.

7. 56769/56770 பாலக்காடு ⇄ திருச்செந்தூர் பயணிகள் ரயில்.

இந்த ரயில் மதுரை ⇄ திருநெல்வேலி இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டு, பாலக்காடு ⇄ மதுரை மற்றும் திருநெல்வேலி ⇄ திருச்செந்தூர் இடையே மட்டுமே இயங்கும். மேலும் இரு மார்க்கத்திலும் 35 நிமிடங்கள் பயண நேரம் குறைக்கப்பட்டு, பாலக்காடு ⇄ பொள்ளாச்சி(56709/56710) இடையே பயணிகள் ரயிலாகவும், பொள்ளாச்சி ⇄ மதுரை(16731/16732) இடையே விரைவு ரயிலாகவும் இயங்கும்.

8. 56805/56806 விழுப்புரம் ⇄ மதுரை பயணிகள் ரயில்.

56805/56806 விழுப்புரம் ⇄ மதுரை பயணிகள் ரயில்.விழுப்புரம் - மதுரை சேவையின் பயண நேரம் 105 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, விழுப்புரம் - விருத்தாசலம்(56805) இடையே பயணிகள் ரயிலாகவும், விருத்தாசலம் - மதுரை(16867) இடையே விரைவு ரயிலாகவும் இயங்கும். மறுமார்கத்தில் பயண நேரம் 80 நிமிடங்கள் குறைக்கப்பட்டு மதுரை - விருத்தாசலம்(16868) இடையே விரைவு ரயிலாகவும், விருத்தாசலம் - விழுப்புரம்(56806) இடையே பயணிகள் ரயிலாகவும் இயங்கும். 

9. 56829/56830 திருச்சி ⇄ ராமேஸ்வரம் பயணிகள் ரயில்.

இந்த ரயிலின் பயண நேரம் இரு மார்க்கத்திலும் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16847/16848 திருச்சி ⇄ ராமேஸ்வரம் விரைவு ரயிலாக இயங்கும்.

10. 56869/56870 திருப்பதி ⇄ பாண்டிச்சேரி பயணிகள் ரயில்.

திருப்பதி - பாண்டிச்சேரி சேவையின் பயண நேரம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16849 திருப்பதி - பாண்டிச்சேரி விரைவு ரயிலாகவும், மறுமார்கத்தில் பயண நேரம் 65 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16850 பாண்டிச்சேரி - திருப்பதி விரைவு ரயிலாகவும் இயங்கும்.

11. விழுப்புரம் ⇄ திருப்பதி பயணிகள் ரயில்.

வண்டி எண் 56882 விழுப்புரம் - திருப்பதி பயணிகள் ரயிலின் பயண நேரம் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16853 திருப்பதி விரைவு ரயிலாகவும், வண்டி எண் 56884 விழுப்புரம் - திருப்பதி பயணிகள் ரயிலின் பயண நேரம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16869 திருப்பதி விரைவு ரயிலாகவும் இயங்கும். மேலும் வண்டி எண் 56885 திருப்பதி - விழுப்புரம் பயணிகள் ரயிலின் பயண நேரம் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16854 விழுப்புரம் விரைவு ரயிலாக இயங்கும்.

12. 66019/66020 அரக்கோணம் ⇄ சேலம் பயணிகள் ரயில்.

அரக்கோணம் - சேலம் சேவையின் பயண நேரம் 45 நிமிடங்களும், சேலம் - அரக்கோணம் சேவையின் பயண நேரம் 65 நிமிடங்களும் குறைக்க்கப்பட்டு 16087/16088 அரக்கோணம் ⇄ சேலம் விரைவு ரயிலாக இயங்கும்.

13. ஈரோடு/மயிலாடுதுறை ⇄ திருநெல்வேலி பயணிகள் ரயில்.

ஈரோடு/மயிலாடுதுறை ⇄ திருநெல்வேலி பயணிகள் ரயில்.தற்போது இந்த ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இரண்டு ரயிலாக பிரிக்கப்ட்டும், இணைக்கப்பட்டும் வருகின்றன. இனி இந்த ரயில்கள் இரண்டு தனி ரயிலாக இயங்கவுள்ளது. அதாவது மயிலாடுதுறை ⇄ திண்டுக்கல் விரைவு ரயிலாகவும், ஈரோடு ⇄ நெல்லை விரைவு ரயிலாகவும் இயங்கும்.

மேலும் மயிலாடுதுறை - திண்டுக்கல் சேவையின் பயண நேரம் 35 நிமிடங்களும், திண்டுக்கல் - மயிலாடுதுறை சேவையின் பயண நேரம் 40 நிமிடங்களும் குறைக்கப்பட்டு 16859/16860 மயிலாடுதுறை ⇄ திண்டுக்கல் விரைவு ரயிலாக இயங்கும்.

அதே போல ஈரோடு - நெல்லை சேவையின் பயண நேரம் 90 நிமிடங்களும், நெல்லை - ஈரோடு சேவையின் பயண நேரம் 30 நிமிடங்களும் குறைக்கப்பட்டு 16845/16846 ஈரோடு - திருநெல்வேலி விரைவு ரயிலாக இயங்கும்.

இதே போல், தென் மேற்கு ரயில்வே மூலம் இயக்கப்படும் 56241/56242 சேலம் ⇄ யஸ்வந்த்பூர் பயணிகள் ரயில் மற்றும் 56513/56514 காரைக்கால் ⇄ பெங்களூரு ஆகிய 2 ஜோடி ரயில்களும் விரைவு ரயில்களாக மாற்றப்படவுள்ளன.

மேற்கொண்ட மாற்றங்களை எதிர்வரும் புதிய அட்டவணையில் இருந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


புதியது பழையவை