130 கி.மீட்டர் மற்றும் 130 கிலோமீட்டருக்கு அதிக வேகமாகச் செல்லும் ரயில்களிலுள்ள ஏசியில்லாத பெட்டிகள் விரைவில் ஏசி பெட்டிகளாக மாற்றப்படும் - ரயில்வே அமைச்சகம்

பெரும்பாலான வழித்தடங்களில் அதிகபட்ச வேகம் 110 கி.மீட்டராக இருந்து வருகிறது. சொகுசு ரயில்களான ராஜதானி, சதாப்தி, துரந்தோ ரயில்கள் மட்டுமே 120 கி.மீ வேகத்துக்கு இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது சில வழிதடங்களில் சில ரயில்கள் 130 கி.மீட்டருக்கு மேல் வேகமாக இயக்குவதற்கு தகுதி வாய்ந்தவை.

இந்நிலையில், 130 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் செல்லும் ரயில்களுக்கு குளிர்சாதன பெட்டிகள் அவசியமானவை. எனவே 130 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் செல்லும் ரயில்களில் உள்ள குளிர்சாதன வசதி அல்லாத பெட்டிகளை ரயில்வே அமைச்சகம் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

Trains running on identified routes at a speed of 130 kmph or above on the railway network will have only air-conditioned coaches in the near future as part of the Railways plans to upgrade the network.