குன்னூர் ரயில் நிலையத்தின் புகைப்படம்
கொரோனோ தொற்று பாதிப்பால், கடந்த மார்ச், 18ல் இருந்து நீலகிரி மலை ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில், தற்போது சுற்றுலா பயணிகள் உதகையை சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அக்டோபர் 10ம் தேதி முதல் குன்னூர் 🔄 உதகமண்டலம் இடையே நீலகிரி மலை ரயில் தடத்தில் ரயில்களை மீண்டும் இயக்க மாவட்ட ஆட்சியர் அனுமது அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து 2 ஜோடி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கவுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு ;
சிறப்பு ரயில் 1 | ⬇️ |
---|---|
குன்னூர் | 7:45 |
உதகை | 9:05 |
சிறப்பு ரயில் 2 | ⬇️ |
உதகை | 9:15 |
குன்னூர் | 10:25 |
சிறப்பு ரயில் 3 | ⬇️ |
குன்னூர் | 12:35 |
உதகை | 13:50 |
சிறப்பு ரயில் 4 | ⬇️ |
உதகை | 14:00 |
குன்னூர் | 15:10 |
சிறப்பு ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கான நெறிமுறைகள்.
- சிறப்பு ரயிலில் பயணிக்க முன்பதிவு அவசியம்.
- பயணிகள் ரயில் நிலையத்திற்குள் வந்து செல்லும் போது கட்டாயம் வெப்பமானி கொண்டு சோதனை செய்யப்படும்.
- பயணிகள் 90 நிமிடங்கள் முன்பாக ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். கொரோனோ தொற்று அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
- பயணிகள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
- ஆரோக்கிய சேது செயலியை பயணிகள் தங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.