திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகல பாதை பணி கொரோனாவுக்கு பிறகு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி மும்மறாக நடைபெற்று வருகிறது

மீட்டர் கேஜ் கால புகைப்படம்


கடந்த புதன் கிழமை ( 09.09.2020) அன்று ரயில் ஆர்வலர்களான மாயவரம் குமார் மற்றும் ரகுவீர் தாசனும் ஆளுக்கொரு மோட்டார் பைக்கில் மயிலாடுதுறையில் இருந்து கிளம்பி செம்பனார்கோயில், திருநள்ளாறு, காரைக்கால், நாகை வேளாங்கண்ணி, வேதாரண்யம் என அனைத்து ஊர்களின் ரயில்வே பணிகளின் தற்போதைய நிலையை பார்த்துக்கொண்டே கோடியக்கரை கடற்கரை வரை சென்றனர். பின்னர் அங்கிருந்து திருத்துறைப்பூண்டி வரை நடக்கும் GC பணிகளை பார்த்துவிட்டு அப்படியே எட்டுக்குடி வந்துவிட்டு பின்னர் திருவாரூர் வழியாக இரவு மயிலாடுதுறை வந்தடைந்தனர்.


இது குறித்து அவர்கள் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளனர். அது உங்கள் பார்வைக்கு....


பேராளம் - காரைக்கால் பணி தொடங்கவே இல்லை. அதுபோல நாகை - திருத்துறைப்பூண்டி புது ரயில் பாதை பணிகளும் எதுவும் நடைபெறவில்லை. 

நாகை - வேளாங்கண்ணி மின்மயமாக்கள் பணி நடைபெற்று கொண்டு இருக்கிறது. அது பற்றி நாளை ஒரு தனி பதிவில் பார்ப்போம்.

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி  அகல பாதை பணி கொரோனாவுக்கு பிறகு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி மும்மறாக நடந்து வருகிறது. TTP முதல் ஆதிறங்கம் வரை டிராக் போட்டு விட்டார்கள். 

இந்த பாதை பற்றிய சிறப்பம்சங்கள் சில...

இந்த பாதையில் திருத்துறைப்பூண்டி மற்றும் அகஸ்தியம்பள்ளி இடையே இருக்கும் அனைத்து நிலையங்களும் ( கரியாபட்டினம், குரவாப்புலம், நெய்விளக்கு, தோப்புத்துறை மற்றும் வேதாரண்யம்) வண்டிகள் மாற முடியாத halt நிலையங்கள். தென்னிந்தியாவில் 37 கிலோமீட்டர் நீள சிங்கிள் பிளாக்கிங் செக்சன் இதுவாகத்தான் இருக்கும்.

அனைத்து நிலையங்களும் குறைந்தது 16 பெட்டிகள் நின்று செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளன. வேதாரண்யம் மற்றும் அகஸ்தியம்பள்ளி நிலையங்கள் 20 பெட்டி களுக்கு மேல் கொள்ளளவு கொண்டதாக இருக்கின்றன. 

அகஸ்தியம்பள்ளி நிலையத்தில் மொத்தம் 4 லயன் கள் வர இருக்கின்றன. இரண்டு பயணிகள் பிளாட்பாரம் மற்றும் இரண்டு கூட்ஸ் பிளாட்பாரம் கள் வர இருக்கின்றன.

திருச்சி, சேலம், திண்டுக்கல், தஞ்சை இங்கு உள்ளது போன்று பூமிக்கடியில் நடை பாலம் அனைத்து இருக்கின்றனர். இரண்டாவது பிளாட்பாரத்தில் இருந்து கீழ் இறங்கி பாதைகளை கடந்து ஒன்றாவது பிளாட்பார திர்க்கு ஏறி வர ஒரு பாதையும் அப்படியே ஏறி நிலையத்திற்கு வெளியே வர மற்றொரு பாதையும் அமைத்து இருக்கின்றனர்.

அது சம்பந்தமான அனைத்து போட்டோக்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய PDF லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. download செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.