ரயில்கள், ரயில்வே நிலையங்களில் புகைப்பிடிப்பது, பிச்சை எடுப்பது போன்ற செயல்களை தண்டனைக்குரிய குற்றம் என்ற பட்டியிலிருந்து நீக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


 அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடம் தேவையில்லாத சட்டங்கள் குறித்த விவரங்களை அனுப்பவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

அதன்தொடர்ச்சியாக, ரயில்கள், ரயில்நிலையங்கள், நடைமேடைகளில் பிச்சை எடுப்பது மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றுக்கு கைது நடவடிக்கை என்று இருக்கும் சட்டத்தை நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், ரயில்களில் புகைப்பிடித்தல் மற்றும் பிச்சைஎடுத்தல் ஆகியவற்றுக்கு கைது நடவடிக்கை இருக்காது. அபராதம் மட்டும் நடைமுறையில் இருக்கும்.


புதியது பழையவை