சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு பயன்படும் வகையில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத சூரியமின்சக்தி அல்லது மின்னணு ஆட்டோ சேவை

புகைப்படம் - Metroraionews.in

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் வகையில், இ- ஆட்டோ சேவையை வழங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன்மூலமாக, காா்பன் மாசுவை குறைக்கவும், சூரிய மின்சக்தி பயன்பாட்டை அதிகரிக்கவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மின்னணு ஆட்டோவில் பயணிகளுக்கு பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மேலும் பெரும்பாலும் பெண்கள் ஓட்டுனர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

முன்னதாக பெண்களால் இயக்கப்படும் 13 வகையான சூரியசக்தி மற்றும் மின்னணு ஆட்டோக்கள் சேவையை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.