திண்டுக்கல் 🔄 பழனி 🔄 கோவை தடத்தில் ரயில் சேவை துவக்க பொதுமக்கள் கோரிக்கை


பொது முடக்க தளர்விற்கு பிறகு தற்போது தமிழகத்தில் சில வழி தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் திண்டுக்கல் - கோயம்புத்தூர் வழித்தடத்தில் இயங்கி வந்த திருவனந்தபுரம் 🔄 மதுரை, பாலக்காடு 🔄 திருச்செந்தூர் மற்றும் பாலக்காடு 🔄 சென்னை உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் பழனி முருகன் கோவில் செல்ல வசதியாகவும், தென்மாவட்ட பயணிகள் தொழில் நகரங்களுக்கு மீண்டும் வந்து சேர எதுவாக திருச்செந்தூர் 🔄 கோவை மற்றும் நெல்லை 🔄 கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயகிடவேண்டும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையில் பாலக்காடு 🔄 சென்னை ரயிலை பொள்ளாச்சி 🔄 சென்னை இடையே இயகிட வேண்டும் என பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.