95989 சரக்கு ரயில் பெட்டிகளை 2020 ஏப்ரல் - ஆகஸ்ட் மாதக் காலத்தில் தெற்கு ரயில்வே கையாண்டுள்ளது : குடுவாஞ்சேரி ↠ சிங்கபெருமாள்கோவில் தடத்தில் விரைவில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு - தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

Guduvancheri Railway Station Picture & Video Gallery - Railway Enquiry 

தெற்கு ரயில்வேயின் சாதனைகள் குறித்து சமீபத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் காணொளி காட்சி மூலம் தெரிவித்திருந்தார்.

அதில், அதிகப்படியான சரக்கு ரயில் பெட்டிகளை இந்த ஆண்டு ஏப்ரல் - ஆகஸ்ட் மாதத்தில் கையங்குள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அதன்படி, 2020ம் ஆண்டு ஏப்ரல் - ஆகஸ்ட் மாத காலத்தில் 95,989 சரக்கு ரயில் பெட்டிகளில் இருந்து உணவு தானியங்கள், ரசாயன உரங்கள், சிமெண்ட் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இறக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை ஓப்பிடுகையில் சுமார் 35% அதிகரித்துள்ளது. அதே சமயம் கடந்த 2019-2020ம் நிதியாண்டில் 70,655 சரக்கு ரயில் பெட்டிகள் மட்டுமே தெற்கு ரயில்வே கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சரக்கு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 28 கிலோமீட்டரில் இருந்து மணிக்கு 46 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.


பொது முடக்க காலத்தில் 614 பார்சல் சிறப்பு ரயில்கள் இயக்கம்.

பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்துக்காக தெற்கு ரயில்வே 614 சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது. மேலும் இதர மண்டலங்களின் 1043 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே கையாண்டுள்ளது. இந்த பார்சல் சிறப்பு ரயில்கள் மூலம் 33,135 டன் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் 13.98 கோடி ரூபாய் தெற்கு ரயில்வேக்கு வருவாய் கிடைத்துள்ளது.


புதிய கட்டமைப்பு

  • மதுரை - உசிலம்பட்டி (37 கிலோமீட்டர்) தடத்தில் ரயில்கள் இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கடந்த ஜனவரி மாதம் அனுமதி.
  • மேச்சேரி ரோடு - மேட்டூர் அணை(11 கிலோமீட்டர்) இரட்டை ரயில் பாதை பணி மற்றும் குடுவாஞ்சேரி - சிங்கபெருமாள்கோவில்(11 கிலோமீட்டர்) மூன்றாவது ரயில் பாதை பணிகள் நிறைவுபெற்றுள்ளது. இந்த தடங்களில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விரைவில் ஆய்வு செய்யவுள்ளார்.
  • அருப்புக்கோட்டை வழியாக அமையவுள்ள மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதையின் ஒரு பகுதியாக மிளவிட்டான் ரயில் நிலையத்தில் யார்ட வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • மன்னார்குடி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில்கள் வந்து செல்ல சரக்கு முனையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதியது பழையவை