கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 94.33 மில்லியன் டன்கள் சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரயில்வே சாதனை

சரக்கு போக்குவரத்தில், இந்திய ரயில்வே குறிப்பிடத்தக்க இலக்கை எட்டியுள்ளது. கடந்த மாதம் இந்திய ரயில்வே 94.33 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச் சென்றது. இது கடந்தாண்டு இதே காலத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குகளைவிட 3.31 மில்லியன் டன்கள் அதிகம்(91.02 மில்லியன் டன்கள்).

இவற்றில் நிலக்கரி 40.49 மில்லியன் டன்களும், இரும்புத் தாது 12.46 மில்லியன் டன்களும், உணவு தானியங்கள் 6.24 மில்லியன் டன்களும், உரங்கள் 5.32 மில்லியன் டன்களும், சிமெண்ட் 4.63 மில்லியன் டன்களும் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் 3.2 மில்லியன் டன்களும் அடங்கும்.

ரயில்வே சரக்கு போக்குவரத்தின் மீது மேலும் ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில், இந்திய ரயில்வேயில் ஏராளமான கட்டண சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 ரயில்வே போக்குவரத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்த, கோவிட்-19 சூழலை, இந்திய ரயில்வே ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி வருகிறது.  
புதியது பழையவை