நெல்லை, பொதிகை, ஆலப்புழா, அனந்தபுரி உள்ளிட்ட 7 ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி

தமிழகத்தில் தற்போது சில வழிதடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அண்டை மற்றும் வட மாநிலங்களுக்கும் சில ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தெற்கு ரயில்வேயில் கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு :

1. சென்னை எழும்பூர் 🔄 திருநெல்வேலி 'நெல்லை' அதிவிரைவு வண்டி.
2. சென்னை எழும்பூர் 🔄 செங்கோட்டை 'பொதிகை' அதிவிரைவு வண்டி.
3. சென்னை எழும்பூர் 🔄 கொல்லம் 'அனந்தபுரி' விரைவு வண்டி.
4. சென்னை எழும்பூர் 🔄 மதுரை 'தேஜஸ்' அதிவிரைவு சொகுசு வண்டி.
5. சென்னை எழும்பூர் 🔄 ராமேஸ்வரம் 'சேது' அதிவிரைவு வண்டி.
6. சென்னை சென்ட்ரல் 🔄 ஆலப்புழா 'அலப்பி' அதிவிரைவு வண்டி.
7. காரைக்கால் 🔄 எர்ணாகுளம் 'டீ கார்டன்' விரைவு வண்டி.

மேற்கொண்ட 7 ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.

இதனை தொடர்ந்து, இந்த ரயில்கள் இயக்கப்படும் தேதி மற்றும் முன்பதிவு துவங்கும் தேதி குறித்த தகவல்கள் எதிர் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வடக்கு ரயில்வே மண்டலம் மூலம் இயக்கப்படும், புது டெல்லி 🔄 பாண்டிச்சேரி அதிவிரைவு வண்டியை இயக்கவும் ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.