அக். 7ம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் இயங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது !

கொரோனா பரவல் காரணமாக அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கம் வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் அன்லாக் செயல்முறையின்படி பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவ்வப்போது பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. 

புறநகா் மின்சார ரயில் சேவையைத் தொடங்க எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துவிட்டது.


இந்த சூழ்நிலையில், வருகிற அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் சென்னை புறந
கர் ரயில் சேவைகள் இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் தெற்கு ரயில்வே ட்விட்டர் பக்கத்தில் இடம்பெறவில்லை.

நெரிசல்மிகுந்த நேரங்களில் சாலைவழியாக வருவதற்கு 2 மணி நேரம் ஆகும். அதேநேரத்தில், புறநகா் ரயிலில் 30 நிமிஷம் முதல் 45 நிமிடங்களில் அலுவலகம் அல்லது வீட்டுக்குத் திரும்பிவிடலாம்.