நாடு முழுவதும் 700 முதல் 1,000 ரயில் நிலையங்களில், பயனர் கட்டணம் வசூலிக்க ரயில்வே நிர்வாகம் திட்டம் !


ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பதற்கும், நிலைய உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும் பயனர் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.


இதுபற்றி ரயில்வே வாரிய தலைமை நிர்வாக அதிகாரியும் தலைவருமான வி கே யாதவ் இது பற்றி கூறுகையில், பயனர் கட்டணமாக குறைந்த தொகையை வசூலிக்க முடிவு செய்துள்ளதாகவும். ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் முடிந்ததும் பயனர் கட்டணம் கட்டண சலுகைகளுக்குச் செல்லும் என்றும் கூறியுள்ளார்.

700 - 1000 ரயில் நிலையங்கள்

இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் சுமார் 7,000 நிலையங்கள் உள்ளன, இதில் பயணிகளுக்கு டோக்கன் பயனர் கட்டணம் 10-15% நிலையங்களுக்கு மட்டுமே வசூலிக்கப்படும் . அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகரிக்கும். அந்த கணக்கீட்டின்படி, 700 முதல் 1,000 ரயில் நிலையங்களில் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

பயனர் கட்டணம் உறுதி

சமீபத்தில், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில், ஒரு எழுத்துப்பூர்வ பதிலில், "சிறந்த பாதுகாப்பு, பயணிகள் வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பதற்கும் நவீனமயமாக்குவதற்கும் ஒரு குழு செயலாளர்கள் (GoS) அமைக்கப்பட்டனர். நிலையங்களின் மறுவடிவமைப்புக்கு பெயரளவு பயனர் கட்டணத்தை வசூலிக்க GoS இன்டரெலியா பரிந்துரைத்தது, இது தற்போது பரிசீலனையில் உள்ளது" என்று தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.