தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் 13 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கம். முன்பதிவு செப். 5ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும்.

தமிழகத்தில் 13 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது. இதனை தொடர்ந்து ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கான நெறிமுறைகளை தெற்கு ரயில்வே வெளியுட்டுள்ளது. மேலும் சிறப்பு ரயில்கள் குறித்த தகவலை தெற்கு ரயில்வே வெளியுட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

சிறப்பு ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கான நெறிமுறைகள்.

  • சிறப்பு ரயிலில் பயணிக்க முன்பதிவு அவசியம்.
  • சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செப் 5ம் தேதி காலை 8மணிக்கு துவங்கும்.
  • பயணிகள் ரயில் நிலையத்திற்குள் வந்து செல்லும் போது கட்டாயம் வெப்பமானி கொண்டு சோதனை செய்யப்படும்.
  • பயணிகள் 90 நிமிடங்கள் முன்பாக ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். கொரோனோ தொற்று அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • பயணிகள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • கம்பளி மற்றும் போர்வைகள் வழங்கப்படாது.
  • ஆரோக்கிய சேது செயலியை பயணிகள் தங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

1 - 02605/02606 சென்னை எழும்பூர் 🔄 காரைக்குடி அதிவிரைவு தினசரி சிறப்பு ரயில் (செப்டெம்பர் 7ம் தேதி முதல்)

02606 காரைக்குடி ➡️ சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில், காரைக்குடியில் இருந்து காலை 4:55க்கு புறப்பட்டு பகல் 12:10க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

மறுமார்கத்தில் 02605 சென்னை எழும்பூர் ➡️ காரைக்குடி அதிவிரைவு ரயில், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3:45க்கு புறப்பட்டு இரவு 11:10க்கு காரைக்குடி சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலில் 13 முன்பதிவு வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு அமரும் வசதி பெட்டிகள் மற்றும் 3 குளிர்சாதன அமரும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

2 - 02635 / 02636 சென்னை எழும்பூர் 🔄 மதுரை அதிவிரைவு தினசரி சிறப்பு ரயில். (செப்டெம்பர் 7ம் தேதி முதல்)

02635 சென்னை எழும்பூர் ➡️ மதுரை அதிவிரைவு ரயில், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1:40க்கு புறப்பட்டு இரவு 9:15க்கு மதுரை வந்து சேரும்.

மறுமார்கத்தில் 02636 மதுரை ➡️ சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 7மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2:35க்கு எழும்பூர் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலில் 13 முன்பதிவு வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு அமரும் வசதி பெட்டிகள் மற்றும் 3 குளிர்சாதன அமரும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

3 - 02637/02638 சென்னை எழும்பூர் 🔄 மதுரை அதிவிரைவு தினசரி இரவு நேர சிறப்பு ரயில்.

மதுரையில் இருந்து செப். 7ம் தேதி முதல்

சென்னை எழும்பூரில் இருந்து செப். 8ம் தேதி முதல்.

02637 சென்னை எழும்பூர் ➡️ மதுரை சிறப்பு ரயில், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9:40கி புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5:30க்கு மதுரை சென்றடையும்.

மறுமார்கத்தில் 02638 மதுரை ➡️ சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9:20க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:15க்கு எழும்பூர் வந்து சேரும்.

இந்த ரயிலில் 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள், 3 இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள் மற்றும் ஒரு முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

4 - 02693/02694 சென்னை எழும்பூர் 🔄 தூத்துக்குடி அதிவிரைவு தினசரி இரவு நேர சிறப்பு ரயில்.

தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 7ம் தேதி முதல்

சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 10ம் தேதி முதல்.

02693 சென்னை எழும்பூர் ➡️ தூத்துக்குடி அதிவிரைவு சிறப்பு ரயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:45க்கு தூத்துக்குடி சென்றடையும்.

மறுமார்கத்தில் 02694 தூத்துக்குடி ➡️ சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், தூத்துக்குடியில் இருந்து இரவு 8:05க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:35க்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த ரயிலில் 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 மூன்றடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள், 2 இரண்டடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள் மற்றும் ஒரு முதல் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

5 - 06181/06182 சென்னை எழும்பூர் 🔄 செங்கோட்டை (வாரத்தில் மூன்று நாட்கள்)

சென்னை எழும்பூரில் இருந்து செப் 10ம் தேதி முதல்..

செங்கோட்டையில் இருந்து செப் 11ம் தேதி முதல்..

06181 சென்னை எழும்பூர் ➡️ செங்கோட்டை சிறப்பு ரயில், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8:25க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

மறுமார்கத்தில் 06182 செங்கோட்டை ➡️ சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், செங்கோட்டையில் இருந்து மாலை 4:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 5:30க்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயிலில் 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 மூன்றடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள், ஒரு இரண்டடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி மற்றும் ஒரு முதல் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.

6 - 02633/02634 சென்னை எழும்பூர் 🔄 கன்னியாகுமரி தினசரி அதிவிரைவு சிறப்பு ரயில்.

சென்னையில் இருந்து செப் 8ம் தேதி முதல்..

கன்னியாகுமரியில் இருந்து செப் 9ம் தேதி முதல்..

02633 சென்னை எழும்பூர் ➡️ கன்னியாகுமரி சிறப்பு ரயில், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5:15க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:20க்கு கன்னியாகுமரி சென்றடையும்.

மறுமார்கத்தில் 02634 கன்னியாகுமரி ➡️ சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், கன்னியாகுமரியில் இருந்து மாலை 5:05க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:15க்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த ரயிலில் 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 மூன்றடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள், 2 இரண்டடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள் மற்றும் ஒரு முதல் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

7 - 02627/02628 திருச்சி 🔄 நாகர்கோவில் அதிவிரைவு தினசரி சிறப்பு ரயில்.(செப் 7ம் தேதி முதல்)

02627 திருச்சி ➡️ நகர்கோவில் சிறப்பு ரயில், திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 6மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்கத்தில் 02628 நாகர்கோவில் ➡️ திருச்சி சிறப்பு ரயில், நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 3மணிக்கு புறப்பட்டு இரவு 9:45க்கு திருச்சி ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த ரயிலில் ஒரு குளிர்சாதன அமரும் வசதி பெட்டி, 8 இரண்டாம் வகுப்பு அமரும் வசதி பெட்டிகள் மற்றும் 8 பொது பெட்டிகளுமஇணைக்கப்பட்டிருக்கும்.

8 - 02671/02672 சென்னை சென்ட்ரல் 🔄 மேட்டுப்பாளையம் தினசரி சிறப்பு ரயில்.

சென்னை சென்ட்ரலில் இருந்து செப் 7ம் தேதி முதல்..

மேட்டுப்பாளையத்தில் இருந்து செப் 8ம் தேதி முதல்..

02671 சென்னை சென்ட்ரல் ➡️ மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து இரவு 9:05க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:15க்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

மறுமார்கத்தில் 02672 மேட்டுப்பாளையம் ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 4:50க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த ரயில் 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 6 மூன்றடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள், 2 இரண்டடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள் மற்றும் ஒரு முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.

9 - 02675/02676 சென்னை சென்ட்ரல் 🔄 கோயம்புத்தூர் தினசரி அதிவிரைவு ரயில்(செப் 7ம் தேதி முதல்)

02675 சென்னை சென்ட்ரல் ➡️ கோயம்புத்தூர் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து காலை 6:10க்கு புறப்பட்டு, பிற்பகல் 2:05க்கு கோயம்புத்தூர் ரயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்கத்தில் 02676 கோயம்புத்தூர் ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3:15க்கு புறப்பட்டு இரவு 11மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரயிலில் இரு குளிர்சாதன அமரும் வசதி பெட்டிகள், 14 இரண்டாம் வகுப்பு அமரும் வசதி பெட்டிகள் மற்றும் 5 பொது பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும்.

10 - 02679/02680 கோயம்புத்தூர் 🔄 சென்னை சென்ட்ரல் தினசரி அதிவிரைவு சிறப்பு ரயில்(செப் 7ம் தேதி முதல்)

02680 கோயம்புத்தூர் ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:15க்கு புறப்பட்டு பிற்பகல் 1:50மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

மறுமார்கத்தில் 02679 சென்னை சென்ட்ரல் ➡️ கோயம்புத்தூர் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து பிற்பகல் 2:30க்கு புறப்பட்டு, இரவு 10:15க்கு கோயம்புத்தூர் ரயில் நிலையம் சென்றடையும்.

இந்த ரயிலில் இரு குளிர்சாதன அமரும் வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு அமரும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

11 - 02673/02674 சென்னை சென்ட்ரல் 🔄 கோயம்புத்தூர் இரவு நேர தினசரி சிறப்பு ரயில்.

சென்னையில் இருந்து செப் 7ம் தேதி முதல்..

கோவையில் இருந்து செப். 8ம் தேதி முதல்..

02673 சென்னை சென்ட்ரல் ➡️ கோயம்புத்தூர் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து இரவு 10மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6மணிக்கு கோயம்புத்தூர் ரயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்கத்தில் 02674 கோயம்புத்தூர் ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10:40க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:35மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரயிலில் 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 5 மூன்றடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள், ஒரு இரண்டடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி மற்றும் ஒரு முதல் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.

12 - 06795/06796 சென்னை எழும்பூர் 🔄 திருச்சி தினசரி பகல் நேர சிறப்பு ரயில்.

சென்னையில் இருந்து செப். 7ம் தேதி முதல்..

திருச்சியில் இருந்து செப். 8ம் தேதி முதல்..

06795 சென்னை எழும்பூர் ➡️ திருச்சி சிறப்பு ரயில், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8மணிக்கு புறப்பட்டு, மாலை 4மணிக்கு திருச்சி ரயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்கத்தில் 06796 திருச்சி ➡️ சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 10மணிக்கு புறப்பட்டு, மாலை 5:50க்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த ரயிலில் 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள், 3 இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள், ஒரு முதல் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டி மற்றும் 3 பொது வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

13 - 02084/02083 கோயம்புத்தூர் 🔄 மயிலாடுதுறை சிறப்பு ரயில்(செவ்வாய் தவிர) - செப். 7ம் தேதி முதல்.

02084 கோயம்புத்தூர் ➡️ மயிலாடுதுறை சிறப்பு ரயில், கோவை ரயில் நிலையத்தில் இருந்து காலை 7:10க்கு புறப்பட்டு, பிற்பகல் 1:40க்கு மயிலாடுதுறை சென்றடையும்

மறுமார்கத்தில் 02083 மயிலாடுதுறை ➡️ கோயம்புத்தூர் சிறப்பு ரயில், மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 2:50க்கு புறப்பட்டு, இரவு 9:15க்கு கோவை ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த ரயிலில் 12 ஜன சதாப்தி இரண்டாம் வகுப்பு அமரும் வசதி பெட்டிகள் மற்றும் இரு ஜன சதாப்தி குளிர்சாதன அமரும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.