தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு 3 ஜோடி ரயில்கள் இயக்கம் : மேலும் 2 ஜோடி ரயில்கள் பெங்களூரில் இருந்து தமிழகம் வழியாக இயக்கம்


1. 02615/02616 சென்னை சென்ட்ரல் ⇆ புது டெல்லி 'கிராண்ட் ட்ரங்க்' அதிவிரைவு தினசரி சிறப்பு ரயில்

02615 சென்னையில் இருந்து செப். 12ம் தேதி முதல்

02616 புது டெல்லியில் இருந்து செப். 14ம் தேதி முதல்

02615 சென்னை சென்ட்ரல் - புது டெல்லி சிறப்பு ரயில், சென்னையில் இருந்து இரவு 7:15க்கு புறப்பட்டு, முன்றாம் நாள் காலை 6:30க்கு புது டெல்லி சென்றடையும். மறுமார்கத்தில் 02616 புது டெல்லி - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், புது டெல்லியில் இருந்து மாலை 6:40க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 6:20க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரயிலில் இரண்டு பொது வகுப்பு பெட்டிகள், 13 படுக்கை வசதி பெட்டிகள், 2 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், 3 இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள் மற்றும் ஒரு ஒருங்கிணைந்த முதல் - இரண்டாம் வகுப்பு பெட்டியும் இருக்கும்.

2. 02669/02670 சென்னை சென்ட்ரல் ⇆ சாப்ரா 'கங்கா காவேரி' அதிவிரைவு சிறப்பு ரயில்(வாரத்தில் இருமுறை)

02669 சென்னையில் இருந்து செப். 12ம் தேதி முதல்

(வாரத்தில் திங்கள் மற்றும் சனிக்கிழமை சென்னையில் இருந்து)

02670 புது டெல்லியில் இருந்து செப். 14ம் தேதி முதல்

(வாரத்தில் திங்கள் மற்றும் புதன்கிழமை சாப்ராவில் இருந்து)

02669 சென்னை சென்ட்ரல் - சாப்ரா சிறப்பு ரயில், சென்னையில் இருந்து திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 5:40க்கு புறப்பட்டு, புதன் மற்றும் திங்கள்கிழமைகளில் காலை 11:450க்கு சாப்ரா சென்றடையும். மறுமார்கத்தில் 02670 சாப்ரா - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், சாப்ராவில் இருந்து திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் இரவு 9மணிக்கு புறப்பட்டு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2:25க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரயிலில் இரண்டு பொது வகுப்பு பெட்டிகள், 13 படுக்கை வசதி பெட்டிகள், 2 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், 3 இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள் மற்றும் ஒரு ஒருங்கிணைந்த முதல் - இரண்டாம் வகுப்பு பெட்டியும் இருக்கும்.

3. 02663/02664 திருச்சி - ஹௌரா அதிவிரைவு சிறப்பு ரயில்(வாரத்தில் இருமுறை)

02664 திருச்சியில் இருந்து செப். 15ம் தேதி முதல்

(வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருச்சியில் இருந்து)

02663 ஹௌராவில் இருந்து செப். 17ம் தேதி முதல்

(வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹௌராவில் இருந்து)

02664 திருச்சி - ஹௌரா சிறப்பு ரயில், திருச்சியில் இருந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 4:20க்கு புறப்பட்டு, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 3:10க்கு ஹௌரா சென்றடையும்.

02664 திருச்சி - ஹௌரா சிறப்பு ரயில்  
திருச்சி--16:20
ஸ்ரீ ரங்கம்16:3816:40
அரியலூர்17:1917:20
விருத்தாசலம்17:5017:52
விழுப்புரம்19:0019:05
மேல்மருவத்தூர்20:1320:15
செங்கல்பட்டு20:5320:55
தாம்பரம்21:2321:25
சென்னை எழும்பூர்22:0522:30
விஜயவாடா05:2005:25
ராஜமுந்திரி07:4007:42
விசாகப்பட்டினம்11:4012:00
ஹௌரா03:10--

மறுமார்கத்தில் 02663 ஹௌரா - திருச்சி சிறப்பு ரயில், ஹௌராவில் இருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4:10மணிக்கு புறப்பட்டு சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 3:05க்கு திருச்சி வந்து சேரும்.

02663 ஹௌரா - திருச்சி சிறப்பு ரயில்  
ஹௌரா--16:10
விசாகப்பட்டினம்05:3505:55
ராஜமுந்திரி08:5108:52
விஜயவாடா12:0512:25
சென்னை எழும்பூர் 19:5520:20
தாம்பரம்20:4820:50
செங்கல்பட்டு21:1821:20
மேல்மருவத்தூர்21:4821:50
விழுப்புரம்23:0023:05
விருத்தாசலம்23:5023:52
அரியலூர்00:3400:35
ஸ்ரீ ரங்கம்01:1801:20
திருச்சி03:05--

இந்த ரயிலில் இரண்டு பொது வகுப்பு பெட்டிகள், 12 படுக்கை வசதி பெட்டிகள், 5 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், 1 இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி மற்றும் ஒரு முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியும் இருக்கும்.

4. 02510/02509 கவுகாத்தி ⇆ பெங்களூர் கண்டோன்மெண்ட் 'காசிரங்கா' அதிவிரைவு சிறப்பு ரயில்(வாரத்தில் மூன்று நாட்கள்)

02510 கவுகாத்தியில் இருந்து செப். 13ம் தேதி முதல்

02509 பெங்களூர் கண்டோன்மென்டில் இருந்து செப். 16ம் தேதி முதல்

02510 கவுகாத்தி - பெங்களூர் கண்டோன்மெண்ட் சிறப்பு ரயில், கவுகாத்தியில் இருந்து ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 6:20க்கு புறப்பட்டு, செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 11:40க்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்து சேரும்.

02510 கவுகாத்தி - பெங்களூர் கண்டோன்மெண்ட் சிறப்பு ரயில்  
கவுகாத்தி--06:20
ஹௌரா00:4501:05
புவனேஸ்வர்07:5007:55
விசாகப்பட்டினம்15:2515:45
விஜயவாடா21:2521:35
பெரம்பூர்04:3504:45
அரக்கோணம்05:4805:50
காட்பாடி06:4006:50
ஜோலார்பேட்டை08:1808:20
பெங்களூர் கே ஆர் புறம்10:3310:35
பெங்களூர் கண்டோன்மெண்ட்11:40--

மறுமார்கத்தில் 02509 பெங்களூர் கண்டோன்மெண்ட் - கவுகாத்தி சிறப்பு ரயில், பெங்களூர் கண்டோன்மென்டில் இருந்து புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 11:40க்கு புறப்பட்டு சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் காலை 6மணிக்கு கவுகாத்தி சென்றடையும்.

02509 பெங்களூர் கண்டோன்மெண்ட் - கவுகாத்தி சிறப்பு ரயில்  
பெங்களூர் கண்டோன்மெண்ட்--23:40
ஜோலார்பேட்டை02:0802:10
காட்பாடி03:1003:30
அரக்கோணம்04:1804:20
பெரம்பூர்05:2505:35
விஜயவாடா13:0513:15
விசாகப்பட்டினம்19:1019:30
புவனேஸ்வர்02:3502:40
ஹௌரா10:5511:15
கவுகாத்தி06:00--

இந்த ரயிலில் இரண்டு பொது வகுப்பு பெட்டிகள், 10 படுக்கை வசதி பெட்டிகள், 7 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 2 இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள் இருக்கும்.

5. 02295/02296 பெங்களூர் ⇆ தனபூர் 'சங்கமித்ரா' அதிவிரைவு தினசரி சிறப்பு ரயில்

02295 பெங்களூர் - தனபூர் சிறப்பு ரயில், பெங்களூரில் இருந்து காலை 9மணிக்கு புறப்பட்டு, முன்றாம் நாள் காலை 9:05க்கு தனபூர் சென்றடையும்.

02295 பெங்களூர் - தனபூர் சிறப்பு ரயில்  
பெங்களூர்--09:00
ஜோலார்பேட்டை10:3610:38
காட்பாடி11:2811:30
அரக்கோணம்12:3512:40
சென்னை சென்ட்ரல்13:3313:35
விஜயவாடா22:1022:20
நாக்பூர்08:1508:20
ஜபல்பூர்17:5018:00
தனபூர்09:05--

மறுமார்கத்தில் 02296 தனபூர் - பெங்களூர் சிறப்பு ரயில், தனபூரில் இருந்து இரவு 8:10க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் மாலை 6:30க்கு பெங்களூர் வந்து சேரும்.

02296 தனபூர் - பெங்களூர் சிறப்பு ரயில்  
தனபூர்--20:10
ஜபல்பூர்07:5007:55
நாக்பூர்17:5518:00
விஜயவாடா05:3505:45
சென்னை சென்ட்ரல்11:0011:10
அரக்கோணம்12:0012:01
காட்பாடி13:0013:01
ஜோலார்பேட்டை15:1915:20
பெங்களூர்18:30--

இந்த ரயிலில் இரண்டு பொது வகுப்பு பெட்டிகள், 10 படுக்கை வசதி பெட்டிகள், 4 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 3 இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள் இருக்கும்.