தமிழகத்தில் 4 வழிதடங்களில் இரண்டாவது ரயில் பாதை அமைக்க இறுதி கட்ட நில ஆய்விற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது

நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகின்றது.

அந்த வகையில் தமிழகத்தில் ஒற்றை ரயில் பாதை கொண்ட 4 வழிதடங்களில் இரண்டாவது ரயில் பாதை அமைக்க ஏற்கெனவே ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் காட்பாடி - விழுப்புரம்(160 கிலோமீட்டர்), கரூர் - திண்டுக்கல்(75 கிலோமீட்டர்), கரூர் - சேலம்(85 கிலோமீட்டர்) மற்றும் ஈரோடு - கரூர்(65 கிலோமீட்டர்) ஆகிய 4 வழிதடங்களில் இரண்டாவது ரயில் பாதை அமைக்க இறுதிகட்ட நில ஆய்வு மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இந்த இறுதிகட்ட நில ஆய்விற்கு ரூ.3.81 கோடி ரூபாயை தெற்கு ரயில்வே ஒதுக்கியுள்ளது. 

இதனை தொடர்ந்து இந்த 4 வழிதடங்களில் ஆய்வு நடத்தி இறுதிகட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதனை தொடர்ந்து இரட்டை பாதை பணிகள் துவங்கும்.