மேட்டூர் அணை 🔄 மேச்சேரி சாலை ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரண்டாவது ரயில் பாதையில் செப். 28ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு


தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வருகின்ற செப் 28ம் தேதி(திங்கட்கிழமை) மேட்டூர் அணை 🔄 மேச்சேரி சாலை ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரண்டாவது ரயில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் அன்றைய தினம் மேச்சேரி சாலை ➡️ மேட்டூர் அணை ரயில் நிலையங்களுக்கு இடையே பிற்பகல் 2மணி முதல் மாலை 5மணிக்குள் அதிவேக ரயில் இயக்கி வேக சோதனை செய்யவுள்ளார்.

எனவே மேற்கொண்ட சமயத்தில், ரயில் தடத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் ரயில் பாதையை கடக்க வேண்டாம் என சேலம் ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கிடையில், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எஞ்சியுள்ள ஓமலூா் முதல் மேச்சேரி சாலை வரையிலான 12 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

COMMISSIONER OF RAILWAY SAFETY TO CONDUCT INSPECTION &

SPEED TRIAL BETWEEN MECHERI ROAD – METTUR DAM RAILWAY STATIONS

 

The Commissioner of Railway Safety, Southern Circle, Bangalore will inspect the newly laid second broad gauge railway line between Mecheri Road – Mettur Dam railway stations in Salem – Mettur Dam section on 28.09.2020, Monday.

Furthermore, the Commissioner of Railway Safety will also conduct a high-speed trial run, using a special train formation, between Mecheri Road – Mettur Dam railway stations.  The high speed trial run will be conducted between 14.00 hrs. – 17.00 hrs. on 28.09.2020, Monday.

People residing in the vicinity of the railway lines between Mecheri Road – Mettur Dam railway stations are hereby cautioned not to approach or trespass the railway lines.