மதுரை-போடி அகல ரயில் பாதை செப். 2021ல் நிறைவடையும் - தெற்கு ரயில்வே பொது மேலாளர்

Indian Railway pics
மீட்டர் கேஜ் கால புகைப்படம்

மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாகத் தீவிரமாக நடைபெற்று வந்தது. முதற்கட்டமாக மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரையிலான 37 கிலோமீட்டர் தூரம் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர் பயணிகள் ரயில் சேவைகளை இயக்க பாதுகாப்பு ஆணையர் அனுமதியளித்தார்.

இதனை தொடர்ந்து, உசிலம்பட்டி - ஆண்டிப்பட்டி(21 கிலோமீட்டர்), ஆண்டிப்பட்டி - தேனி(17 கிலோமீட்டர்), தேனி - போடி(15 கிலோமீட்டர்) என மூன்று பகுதிகளாக அகல ரயில் பாதை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்காரணமாக அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. 

பின்னர் ஊரடங்கில் சில பணிகளுக்கு அரசு தளர்வு அறிவித்ததை தொடர்ந்து, போடி - மதுரை அகல ரயில் பாதைக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மதுரை - போடி அகல ரயில் பாதை பணிகள் செப். 2021ல் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக என தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை