எத்தனை ரயில் பெட்டிகள் 'கோவிட் 19' தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டது? மக்களவை உறுப்பினர் தமிழச்சி கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதில்

பொது முடக்க காலகட்டத்தின்போது, கொரோனா சிகிச்சை மற்றும் பராமரிப்புக்கு, நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தலுக்கு ரயில் கோச்களை வழங்கியுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் நாட்டில் மாற்றப்பட்ட ரயில் கோச்களின் பயன்பாட்டு நிலை, ரயில்வே மண்டலம் வாரியாக கூற முடியுமா? என மக்களவை உறுப்பினர் தமிழச்சி கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சர் மொத்தம் 5231 ஐசிஎப் பெட்டிகள் தற்காலிகமாக கோவிட் -19 தனிமைப்படுத்தும் வார்டுகளாக மற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் மண்டல வரியாக தற்காலிகமாக கோவிட் -19 தனிமைப்படுத்தும் வார்டாக மாற்றப்பட்ட பெட்டிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு :


 
மத்திய ரயில்வே482
கிழக்கு ரயில்வே380
மத்திய கிழக்கு269
கிழக்கு கடற்கரை261
வடக்கு ரயில்வே540
மத்திய வடக்கு130
வட கிழக்கு217
வடகிழக்கு ஃப்ரான்டியர்315
வட மேற்கு266
தெற்கு ரயில்வே573
மத்திய தெற்கு ரயில்வே486
தென் கிழக்கு ரயில்வே338
தென்கிழக்கு மத்திய111
தென் மேற்கு ரயில்வே320
மேற்கு ரயில்வே410
மத்திய மேற்கு ரயில்வே133