அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கான கணினி சார்ந்த தேர்வை 15 டிசம்பர் 2020-இல் இருந்து இந்திய ரயில்வே நடத்தவிருக்கிறது.

ரயில்வேயில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 640 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆன்லைனில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் தெரிவித்துள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கான கணினி சார்ந்த தேர்வை 15 டிசம்பர் 2020-இல் இருந்து இந்திய ரயில்வே நடத்தவிருக்கிறது.

மூன்று வகையான காலியிடங்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. தொழில்நுட்பம் சாராத பிரபல பிரிவுகளில் (non technical popular categories) 35,208 காலியிடங்களும், தனித்த மற்றும் அமைச்சு பிரிவுகளில் 1663 பணியிடங்களும், 103769 நிலை 1 பணியிடங்களும் இவையாகும்.

விண்ணப்பங்களின் சரிபார்த்தல் பணி முடிவடைந்த போதிலும், தேர்வு செயல்முறை கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகளால் தாமதமானது.

தேர்வுகளை நடத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகளால் பரிந்துரைக்கப்பட்ட தனி நபர் இடைவெளி மற்றும் இதர வழிமுறைகள் பின்பற்றப்படும்.