கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள்கோவில் ரயில் நிலையங்களுக்கு (11 கி.மீ) இடையே நாளை(செப் 29) அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே அமைக்கப்பட்டு வரும் மூன்றாவது ரயில் பாதையின் ஒரு பகுதியாக கூடுவாஞ்சேரி -  சிங்கப்பெருமாள்கோவில்(11 கி.மீ) ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தடத்தை பெங்களூரில் உள்ள தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் செவ்வாய்க்கிழமை (செப்.29) ஆய்வு செய்ய உள்ளாா்.

இந்த சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.29) காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெற உள்ளது.

அது சமயம் மேற்கொண்ட ரயில் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் ரயில் தண்டவாளம் அருகில் நடக்கவோ, கடக்கவோ வேண்டாம் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.