கடந்த வருடத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 10 சதவீத அதிக சரக்குகள் ரயில்வேதுறை கையாண்டுள்ளது

கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தில் ஏற்றப்பட்ட சரக்குகளின் அளவு மற்றும் வருவாயுடன் ஒப்பிடும் போது, 6 செப்டம்பர் 2020 வரையில் இந்திய ரயில்வேயில் ஏற்றப்பட்ட சரக்குகளின் அளவு மற்றும் மதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த மாதத்தில் 6 செப்டம்பர் 2020 வரையில் இந்திய ரயில்வேயில் ஏற்றப்பட்டுள்ள சரக்குகளின் எடை 19.19 மில்லியன் டன்களாகும். கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தின் 17.38 மில்லியன் டன்களோடு ஒப்பிடும் போது, இது 10.41 சதவீதம் (1.81 மில்லியன் டன்கள்) அதிகமாகும்.

இந்த காலகட்டத்தில் ரூ 1836.15 கோடி வருவாயை சரக்கு போக்குவரத்தின் மூலம் இந்திய ரயில்வே ஈட்டியுள்ளது. கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட வருவாயான ரூ 1706.47 கோடியுடன் ஒப்பிடும் போது, இது ரூ 129.68 கோடி அதிகமாகும்.

இந்த மாதத்தில் 6 செப்டம்பர் 2020 வரையில் இந்திய ரயில்வேயில் ஏற்றப்பட்டுள்ள சரக்குகளின் எடையான 19.19 மில்லியன் டன்களில், 8.11 மில்லியன் டன்கள் நிலக்கரி, 2.59 மில்லியன் டன்கள் இரும்பு தாது, 1.2 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள், 1.03 மில்லியன் டன்கள் உரங்கள் மற்றும் 1.05 மில்லியன் டன்கள் சிமெண்ட் அடங்கும்.