பாலக்காடு 🔄 திருச்செந்தூர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம், இனி பாலக்காடு 🔄 மதுரை இடையே மட்டும் இயங்கும் - ரயில்வே வாரியம் அதிரடி

புகைப்படம் - ஸ்ரீனிவாஸ்

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூருக்கு மாலை 4 மணிக்கு சென்றடைகிறது. 

மறுமார்கத்தில் திருச்செந்தூரில் இருந்து முற்பகல் 11:40க்கு புறப்பட்டு பாலக்காடிற்கு இரவு 10:45க்கு சென்றடையும்.

இந்த ரயில் கடந்த ஒரு வருடமாக முழுமையாக இயங்கவில்லை. மதுரை - மணியாச்சி தடத்தில் நடைபெறும் இரட்டை பாதை பணி காரணமாக இந்த ரயில் பகுதி தூரம் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் புதிய அட்டவணையில் இந்த ரயிலின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த ரயில் இனி மதுரை 🔄 நெல்லை இடையே நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து இந்த ரயில் பாலக்காடு 🔄 மதுரை மற்றும் நெல்லை 🔄 திருச்செந்தூர் என இரண்டு தனி ரயில்களாக இயங்கும்.

மேற்கொண்ட மாற்றம் எதிர்வரும் புதிய அட்டவணையில் இருந்து அமலுக்கு வருவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை