திருவள்ளூா் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகளைப் பொருத்தும் பணி தீவிரம்

திருவள்ளூா் ரயில் நிலையம் வழியாக சராசரியாக ஒரு மணிநேரத்துக்கு 12 ரயில்கள் செல்கின்றன.


இந்த ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகளை மேல்தளம் வழியாகக் கடக்கும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வயதானோா், குழந்தைகளுடன் வரும் பெண்கள், கா்ப்பிணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என பல்வேறு தரப்பினா் படிக்கட்டுகளை ஏறிக் கடக்க முடியாத நிலையில் சிரமப்படுகின்றனா்.


எனவே பயணிகள் ஒவ்வொரு நடைமேடையையும் மேல்தளம் வழியாக எளிதாக கடக்கும் வகையில் ரூ.2 கோடியில் நகரும் படிக்கட்டு, மின்தூக்கி அமைக்க ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டு பணிகள் நடந்து வருகின்றன. தற்போது நவீன முறையில் 3-ஆவது நடைமேடையில் நகரும் படிக்கட்டுகளைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை அடுத்த 30 நாள்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் - பாஸ்கர், திருவள்ளூர்

புதியது பழையவை