தருமபுரி ரயில் நிலையத்தில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் ஆய்வு

தருமபுரி ரயில் நிலையத்தில் ரூ.15 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறைக் கட்டடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் செய்தியாளா்களிடம் பேசிகையில் :

தருமபுரி ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடையில் கழிப்பறை வசதி வேண்டும் என பயணிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், தற்போது புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டுக்கு தயாா் நிலையில் உள்ளது.


தருமபுரி நகரிலிருந்து ரயில் நிலையம் வரும் சாலை பழுதடைந்துள்ளது. இச்சாலை சீரமைக்கப்படும் என ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. எனவே, இச்சாலையை விரைந்து அமைக்க வேண்டும். ரயில் நிலையத்தில் 5 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ஓய்வு அறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

பெங்களூரிலிருந்து தருமபுரி மாா்க்கமாக சேலம் செல்லும் இந்த ரயில்பாதை இருவழிப் பாதையாகவும், மின்பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


மேலும், மொரப்பூரிலிருந்து தருமபுரி வரை ஏற்கெனவே இருந்த ரயில்பாதை இடத்தை குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில், தருமபுரி நகரில் மட்டும் சுமாா் 8 கி.மீ. தொலைவு குடியிருப்புப் பகுதியாக மாறிவிட்டது. எனவே, இதனைத் தவிா்த்து, மாற்று வழியில் ரயில்பாதை அமைக்க ரயில்வே துறையினரும், தருமபுரி மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மொரப்பூா் 🔄 தருமபுரி ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்துவோம் என்றாா்.

புதியது பழையவை