மும்பையில் இருந்து நெல்லை அல்லது நாகர்கோவிலுக்கு உடனடியாக ரயில் இயக்க தமிழக முதல்வருக்கு மும்பை தமிழன ரயில் பயணிகள் சங்கம் கடிதம்

கொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் தொற்று குறைவாக உள்ள சில மாநிலங்களில் சமீபத்தில் ரயில் உள்பட்ட போது4போக்குவரத்து சேவை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையில் இருந்து சேலம், மதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் 16339 ரயில், அல்லது மும்பையில் இருந்து கொங்கன் வழியாக நெல்லை செல்லும் 22629 ரயிலில் ஏதேனும் ஒன்றை உடனடியாக இயக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு மும்பை தமிழன ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மும்பை தமிழன ரயில் பயணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில், மும்பை மற்றும் புனேயில் வசிக்கும் 20 லட்சத்திற்கும் அதிகமான தமிழக தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் கடந்த 4 மாதங்களாக பதிக்கப்பட்டுள்ளதாகவும். எந்த ஒரு குடும்பத்தாரின் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தற்போது மும்பையில் வசிக்கும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் ரயில் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து இ-பாஸ் எடுத்து வாடகை வாகனம் மூலம் தமிழகம் செல்வதாகவும், இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், எனவே மும்பையில் இருந்து தமிழகத்திற்கு உடனடியாக ரயில் சேவை துவக்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.