ரயில்வே காவல் துறை டி.ஐ.ஜி.யாக ஜெயகெளரி நியமனம் - தமிழக அரசு

ரயில்வே காவல் துறை டி.ஐ.ஜி.யாக ஜெயகெளரி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா் நேற்று(ஆகஸ்ட் 4) வெளியுட்டுள்ளார்.

சென்னை செயலாக்கப் பிரிவு ஐ.ஜி. என்.பாஸ்கரன் தமிழ்நாடு காவல் அகாதெமி ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்து இணை ஆணையாளா்-வடக்கு எம்.வி.ஜெயகெளரி ரயில்வே காவல் துறையின் டிஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ரயில்வே காவல் துறை டி.ஐ.ஜி. எம்.பாண்டியன் சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்து இணை ஆணையா்-வடக்கு ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதியது பழையவை