தென்காசி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மக்களவை உறுப்பினர், தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளரை தொடா்பு கொண்டு ரயில் நிலையத்தில் மூடிவைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உடனடியாக திறந்து விடவேண்டும். ரயில் நிலையத்தின் வடபுறம் நுழைவு வாயிலிலும் பயணசீட்டு மையம் அமைக்க வேண்டும். தற்போது ரயில் நிலையத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சுவா் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

புகைப்படங்கள் - மக்களவை உறுப்பினர், முகநூல் பக்கம்.