பொன்மலை பணிமனையில் வடமாநிலத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்கு திருச்சி மக்களவை உறுப்பினர் கண்டனம்


திருச்சி மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு பணிகளில் குறிப்பாக தென்னக ரயில்வேயில் திருச்சி மதுரை சென்னை உட்பட பல்வேறு பணிகளிலும் தொழிற்சாலைகளிலும் வடமாநிலங்களில் குறிப்பாக பீகார் உத்தர பிரதேஷ் போன்ற மாநிலங்களிலிருந்து பணிக்கு ஆட்களை தேர்வு செய்வது சமீபகாலமாக மிகவும் அதிகரித்து வருகிறது என்பது வருத்தத்திற்கு கண்டனத்திற்கும் மறுபரிசீலனைக்கும் உரியதாகும்.

சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 2000 பேரில் 1500க்கும் மேற்பட்டவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் திருச்சியில் தேர்வுசெய்யப்பட்ட 500 பேரில் 450 பேர் பீகார் போன்ற வடமாநிலத்தவர் என்பதும் அதிர்ச்சியையும் கவலையையும் தரக்கூடியதாகும். கொரொனா பாதிப்பு எங்கும் நிலவும் நிலையில் 300க்கும் மேற்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்க்க இ-பாஸ் வழங்கப்பட்டு திருச்சிக்கு எப்படி வந்தார்கள் என்பது ஆச்சரியத்திற்கும் கேள்விக்கும் உரியதாகும்.

தற்காலிக பணியாளர்கள் சுமார் 2,000 பேர் நிரந்தர வேலை கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர் இதுகுறித்து இவர்களின் போராட்டக்குழு தலைவர்களோடு மத்திய அமைச்சர் உட்பட பலரையும் சந்தித்து இது குறித்து பேசினேன்.

இந்தியா ஒரே நாடு தான். பீகாரில், உத்தரப்பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பு கிடைப்பது போல் தமிழ்நாட்டை சார்ந்த இளைஞர்களுக்கு பீகார், உபி போன்ற மாநிலங்களில் இது போல் அதிக அளவில் வாய்ப்பு கிடைப்பது இல்லையே. 

இதுபோன்ற சூழலில் அந்தந்த மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் உருவாகும் போது அந்தந்த மாநிலத்திற்கு முன்னுரிமை தந்து அந்த மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு குறைந்தபட்சம் பெரும்பான்மையான பணிகள் வழங்கப்பட வேண்டும். இதற்கு ஏற்றவகையில் தேவையானால் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

தமிழக அரசின் சார்பில் தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு பணிகளில் முன்னுரிமை வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கருத்துரையிடுக

புதியது பழையவை