சென்னை துறைமுகத்தில் இருந்து, கர்நாடகா மாநிலம், ஒயிட் பீல்டுக்கு 'கண்டெய்னர்' ரயில் சேவை துவக்கம்

'கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனத்துடன் ரயில்வே நிர்வாகம் இணைந்து, சென்னை துறைமுகத்திற்கு, கப்பலில் வந்தடையும் கன்டெய்னர்கள், கர்நாடகா மாநிலம், ஒயிட்பீல்டில் உள்ள, தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்களுக்கு அனுப்ப, தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், சிறப்பு சரக்கு ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவை நேற்று முன்தினம் துவங்கியது. இந்த தினசரி கண்டெய்னர் ரயில் போக்குவரத்துக்காக பிரத்யேக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இந்த ரயில், ஒய்ட் பீல்டில் இருந்து, அதிகாலை, 5:00 மணிக்கு புறப்பட்டு, காலை, 11:10க்கு, சென்னை துறைமுகத்தை வந்தடையும்.

மறுமார்கத்தில் சென்னை துறைமுகத்தில் இருந்து காலை, 10:00 மணிக்கு புறப்பட்டு, மாலை, 3:55க்கு ஒயிட்பீல்டு சென்றடையும்.

சென்னை துறைமுகத்தில் இருந்து, ஒயிட்பீல்டுக்கு இயக்கப்படும் இந்த ரயிலின், ஒரு வழி பயணத்தில் 4.3 லட்சம் ரூபாய், வருவாய் கிடைக்கும் என, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை