புதுச்சேரி - கடலூா் இடையே விரைவில் ரயில் போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் - புதுச்சேரி முதல்வர்

Petition · Start the long pending Chennai to Cuddalore ECR Railway ...

நாடு முழுவதும் 74-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அரசு சார்பில் சுதந்திர தின விழா உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டரங்கில் கொண்டாடப்பட்டது. இதில் முதல்வா் நாராயணசாமி தேசியக் கொடியேற்றினாா்.

பின்னர்  விழாவில் பேசிய புதுச்சேரி முதல்வர், புதுச்சேரி - கடலூா் இடையே ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கான திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு, ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும். இறுதி நிலை வழித்தட அளவீடு, மண் தர ஆய்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான செயல் திட்டத்தைத் தயாரிக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது என்றும் கூறினார்.

மேலும் காரைக்கால் - பேரளம் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதியது பழையவை