ரெயில்கள் ரத்து - முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெறலாம்

IRCTC Train Ticket Refund Rules Details Indian Railway | IRCTC Help

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வின் போது, கோவை - மயிலாடுதுறை, அரக்கோணம் - கோவை, கோவை - காட்பாடி, திருச்சி - நாகர்கோவில், செங்கல்பட்டு - திருச்சி மற்றும் விழுப்புரம் - மதுரை உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டன.

கொரோனா தொற்று அதிகரிக்க தொடர்ந்ததை தொடர்ந்து, தமிழக அரசு சிறப்பு ரயில்களை ரத்து செய்ய தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்திருந்தது, இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 31ம் தேதி வரை மேற்கொண்ட ரயில்கள் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேரடியாக முன்பதிவு மையம் மூலம் முன்பதிவு செய்தோர், ஆறு மாதத்துக்குள், எப்போது வேண்டுமானாலும், உரிய பயணச்சீட்டைக் காட்டி, பணம் பெறலாம். அதே சமயம் இணைய வழியாக முன்பதிவு செய்தோருக்கு, இணைய வழியாக உரிய தொகை திருப்பி அனுப்பப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.