சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மண் பரிசோதனை மீண்டும் தொடங்கியது

Photo - Metro Rail News

சென்னையில் மாதவரம் முதல் சிப்காட், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் மற்றும் கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை 3 கட்டங்களாக 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

இதில் மாதவரம் - கோயம்பேடு மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. மேலும் பணிகளை தொடங்குவதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் கட்டமாக சுரங்கப்பாதைகள் அமைக்க ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. தொடர்ந்து மண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சூழ்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக மண் பரிசோதனை உள்ளிட்ட ஆரம்ப கட்டப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2-ம் கட்டப் பணிக்கான மண் பரிசோதனை நகர்ப்புற பகுதியில் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதேபோல கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் விறுவிறுப்பு அடைந்துள்ளது.