சில்சார் 🔄 திருவனந்தபுரம் வாராந்திர ரயிலை, கோயம்புத்தூர் 🔄 திருவனந்தபுரம் இடையே ரத்து செய்ய ரயில்வே வாரியம் அனுமதி.

அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்தில் இருந்து சில்சார் 🔄 திருவனந்தபுரம் விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இது இந்தியாவின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் 2வது அதிவிரைவு ரயில்.

இந்நிலையில் 2020 அட்டவணையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வரும் ரயில்வே நிர்வாகம், இந்த ரயிலின் சேவையுளும் மாற்றம் செய்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு :

பகுதி தூரம் ரத்து.

12515/12516 திருவனந்தபுரம் 🔄 சில்சார் அதிவிரைவு ரயில் (வாராந்திர)
திருவனந்தபுரத்தில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், ஓங்கோல் வழியாக செல்லும் இந்த ரயில், இனி கோயம்புத்தூர் 🔄 சில்சார் இடையே மட்டுமே இயங்கும். அதாவது திருவனந்தபுரம் 🔄 கோயம்புத்தூர் இடையே நிரந்தரமாக ரத்து செய்ய ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

தடம் மாற்றம்.

12515/12516 திருவனந்தபுரம் 🔄 சில்சார் அதிவிரைவு ரயில் (வாராந்திர)
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், ஓங்கோல் வழியாக செல்லும் இந்த ரயில், இனி ஹௌரா ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. அதற்கு பதிலாக டன்குனி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.