நாடு முழுவதும் ரயில் சேவையில் மிக பெரிய மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பல பயணிகள் ரயில் விரைவு ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில பயணிகள் ரயில்கள் பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் 3 ரயில்களின் சேவைகளை குறைக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு :

1. வாரத்தில் இரண்டு முறையில் இருந்து ஒரு முறை.

நெல்லையில் இருந்து காஷ்மீருக்கு இயக்கப்படும் 16787/16788 திருநெல்வேலி 🔄 ஸ்ரீ வைஷ்ணவ தேவி கத்ரா விரைவு ரயில் இனி வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே இயங்கும்.

2. தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில் இனி 5 நாட்கள் மட்டுமே.

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு பகல் நேரத்தில் விரைவு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த 16233/16234 ரயில் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்.

3. தினசரி பயணிகள் இனி வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே.

அரக்கோணத்தில் இருந்து சேலத்திற்கு பயணிகள் ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த 66019/66020 ரயில் இனி வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே இயங்கும். அதாவது சனிக்கிழமை சேவை கிடையாது.

மேற்கொண்ட மாற்றங்கள் எதிர்வரும் புதிய அட்டவணையில் இருந்து அமலுக்கு வரவுள்ளது.