மயிலாடுதுறை 🔄 திருநெல்வேலி பயணிகள் ரயில், இனி மயிலாடுதுறை 🔄 திண்டுக்கல் இடையே மட்டுமே இயங்கும் - ரயில்வே வாரியம்

புகைப்படம் - அரவிந்த், சென்னை

மயிலாடுதுறை 🔄 திருநெல்வேலி இடையே தற்போது பயணிகள் ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது

இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து முற்பகல் 11:25க்கு புறப்பட்டு மாலை 4:20க்கு திண்டுக்கல் சென்று அங்கிருந்து ஈரோடு - நெல்லை பயணிகள் ரயிலுடன் இணைக்கப்பட்டு மாலை 4:35க்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு இரவு 11:30க்கு நெல்லை சென்றடையும்.

மறுமார்கத்தில் நெல்லையில் இருந்து அதிகாலை 5:05க்கு புறப்பட்டு, காலை 11 மணிக்கு திண்டுக்கல் வந்து அங்கிருந்து நெல்லை ➡️ ஈரோடு இருந்து பிரிக்கப்பட்டு பகல் 11:15க்கு புறப்பட்டு மாலை 5:15க்கு மாயவரம் சென்றடையும்.

இந்த நிலையில் நாடு முழுவதும் ரயில் சேவையில் மிக பெரிய மாற்றத்தை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை 🔄 திருநெல்வேலி பயணிகள் ரயில் இனி மயிலாடுதுறை 🔄 திண்டுக்கல் இடையே மட்டுமே இயங்கும் என ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதாவது திண்டுக்கல் 🔄 நெல்லை இடையே இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் மேற்கொண்ட மாற்றம் எதிர்வரும் புதிய அட்டவணையில் இருந்து அமலுக்கு வருவதாக ரயில்வே வாரியம் குறிப்பிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை பகுதிகளில் இருந்து பகல் நேரத்தில் குறைந்த கட்டணத்தில் நேரடியாக மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, மணியாச்சி, மற்றும் நெல்லை பகுதிகளுக்கு பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.