கன்னியாகுமரி 🔄 மும்பை 'ஜெயந்தி ஜனதா' விரைவு ரயில், புனே வரை மட்டுமே இயங்கும் - ரயில்வே வாரியம்

கன்னியாகுமரி 🔄 மும்பை இடையே இயங்கி வரும் 16381-16382 'ஜெயந்தி ஜனதா' விரைவு ரயில், கன்னியாகுமரி 🔄 புனே இடையே மட்டுமே இயங்கும்.

நாடு முழுவதும் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் சமீப காலமாக செய்து வருகிறது.

கொச்சின் ➡️  மும்பை இடையே கடந்த 1976ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்த ரயில் சேவை துவக்கப்பட்டது. மும்பை ➡️ கொச்சின் இடையே கடந்த 1976ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி துவங்கப்பட்டது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் 16382 கன்னியாகுமரி 🔄 மும்பை 'ஜெயந்தி ஜனதா' விரைவு ரயிலின் அட்டவணையில் மே 1ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் ரயில்வேத்துறை அறிவித்திருந்தது.

அதன்படி கன்னியாகுமரியில் இருந்து காலை 8:25க்கு புறப்படும் ரயில், மூன்றாம் நாள் அதிகாலை 4:35க்கு மும்பை சென்றடையும்.

மறுமார்கத்தில் பிற்பகல் 3:35க்கு மும்பையில் இருந்து புறப்படும் ரயில், மூன்றாம் நாள் பிற்பகல் 12மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும்.

இந்த நிலையில் கொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த அட்டவணையில் ரயில் இயங்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த ரயிலை புனே 🔄 மும்பை ரத்து செய்ய ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

அதாவது இந்த ரயில் இனி கன்னியாகுமரி 🔄 புனே இடையே மட்டுமே இயங்கும்.

மேற்கொண்ட மாற்றம் எதிர் வரும் புதிய அட்டவணையில் இருந்து அமலுக்கு வரவுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை