கன்னியாகுமரி 🔄 திப்ருகர் வாராந்திர ரயிலின் சேவையை தினசரி ரயிலாக அதிகரிக்கும் திட்டத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்

Photo courtesy - SreenathSree

கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோவை, சேலம், காட்பாடி, விஜயவாடா, விசாகப்பட்டிணம், புவனேஸ்வர், கட்டாக், ஆஸ்னாசால், ஜெபல்பூரி, கவுகாத்தி வழியாக திப்ருகர்க்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் 2011-ம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு தமிழகத்தின் கடைசி மாவட்டமான குமரியிலிருந்து புறப்பட்டு கேரளா சென்றுவிட்டு பின்னர் தமிழகம் வந்து (கோவை, சேலம், காட்பாடி) ஆந்திரா வழியாக திப்ருகர்க்கு இயக்கப்பட்டு வருகிறது. 

Photo courtesy - IRI

இந்த சூழ்நிலையில் கன்னியாகுமி 🔄 திப்ருகர் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் இதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த ரயிலின் வழித்தடத்தில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி புதிய அட்டவணையை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவுத்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு :


15905 கன்னியாகுமரி - திப்ருகர் தினசரி ரயில்.  
கன்னியாகுமரி 18:00
ரேனிகுண்ட12:4512:55
துவ்வாடா0:180:20
பத்ரக்10:4810:50
மால்டா நகரம்22:2022:30
திப்ருகர்22:20 
   
15906 திப்ருகர் - கன்னியாகுமரி தினசரி ரயில்.  
திப்ருகர் 19:30
மால்டா நகரம்19:4519:55
பத்ரக்6:506:52
துவ்வாடா17:3817:40
ரேனிகுண்ட5:055:15
கன்னியாகுமரி23:50

Photo courtesy - IRI

புதிய வழித்தடம்.

தற்போது இந்த ரயில் துர்காபூர், அசன்சோல் சந்திப்பு, அத்ரா சந்திப்பு, பாங்குரா சந்திப்பு, மேதினிப்பூர், ஹிஜ்லி வழித்தடத்தில் இயங்கி வருகிறது. இதற்கு பதிலாக இனி டன்குனி, பட்ட நகர், கரக்பூர் வழித்தடத்தில் இயங்கும்.

மாற்றியமைக்கப்பட்ட வழித்தடத்தில் நின்று செல்லும் நிறுத்தம்.

நகர்கட்டியா, சிமல்குரி, பார்தமன், டன்குனி, கரக்பூர்.

Photo courtesy - IRI

கன்னியாகுமரி 🔄 திப்ருகர் ரயில் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்.

📌 கன்னியாகுமரியிலிருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் செல்லும் விவேக் விரைவு ரயில், இந்தியாவின் மீக நீண்ட தூர ரயில் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

📌 சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்ததினத்தையொட்டி, கடந்த 2011-12ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அப்போதைய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, இந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகம் செய்தார்.

📌 தற்போது விவேக் விரைவு ரயில் அசாம் மாநிலம் திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரி வரை 4,273 கிமீ தூரம் பயணிக்கிறது. நீண்ட தூரத்தில் மட்டுமல்ல, அதிக நாட்கள் பயணிக்கும் ரயில் என்ற பெருமையும் இந்த ரயிலுக்கு உண்டு.

📌 தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிஷா, மேற்குவங்கம், பீகார், அசாம், நாகாலாந்து என பல மாநில மக்களுக்கு சேவையளிக்கிறது.

📌 தூத்துக்குடியிலிருந்து குஜராத் மாநிலம் ஒகாவிற்கும், மும்பை பந்த்ராவிலிருந்து ஜம்முதாவி வரையிலும், கொல்கட்டாவிலுள்ள சந்திரகச்சியிலிருந்து மங்களூர் வரை என மேலும் 3 'விவேக்' விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதே சமயம் கன்னியாகுமி – திப்ருகர் ரயிலை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழிதடம் வழியாக வழித்தடத்தை மாற்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். இவ்வாறு இயக்கும் போது குமரி மாவட்டத்திலிருந்து தங்கள் மாநிலத்தின் தலைநகரான சென்னை செல்ல தினசரி ரயில் வசதி கிடைக்கும் என்றும் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இந்த ரயிலை மதுரை, சென்னை வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை