அயோத்தியில் புதிய ரயில் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் துவக்கம் : 104 கோடி மதிப்பீட்டில் மறுகட்டமைப்பு

வீடியோ

அயோத்தி நகரில் உள்ள ரயில் நிலையம் மிகவும் பழையதாக இருந்ததால், அதை மறுகட்டமைப்புச் செய்து கட்டுவதற்காக கடந்த 2017-18 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.104 கோடி அளவில் திட்டம் தயார் செய்யப்பட்டு அதில் இதுவரை ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தின் பூமி பூஜை நிகழ்ச்சி இன்று(ஆகஸ்ட் 5) நடைபெற இருக்கிறது.

இந்த ரயில் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடியும். தற்போது ரயில் நிலையத்தில் நடைபாதை 1,2,3 ஆகியவற்றின் பணிகள் நடைபெற்று வருகிறது. 

புதிய ரயில் நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஏராளமான புதிய வசதிகள் பயணிகளுக்காகச் செய்யப்பட்டுள்ளன. டிக்கெட் கவுண்ட்டர்கள் அதிகரிப்பு, பயணிகள் காத்திருப்பு அறை விரிவாக்கம், குளிர்சாதன வசதியுடன் கூடிய 3 ஓய்வறைகள், கழிப்பறையுடன் ஆண்கள் மட்டும் தங்கக்கூடிய தங்குமிடம், கழிப்பறை வசதியுடன் 10 படுக்கைகள் கொண்ட பெண்கள் தங்குமிடம், உணவகம், சுற்றுலா மையம், வாடகைக் கார்கள் நிறுத்துமிடம், குழந்தைகள் விளையாடுமிடம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து ரயில்வேத்துரை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கோடிக்கணக்கான பக்தர்கள் ராமரை தரிசனம் செய்வதற்காக வருகை புரிய உள்ளனர். இதனால் அயோத்தி ரயில் நிலையத்தை சீரமைக்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.புதியது பழையவை