தெற்கு ரெயில்வேயில் 969 ரெயில்வே ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் ; 20 ஊழியர்கள் உயிரிழப்பு - பொது மேலாளர் தகவல்

East Coast Railway to convert 32 coaches into isolation cabins ...

தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை பெரம்பூர் ரெயில்வே மைதானத்தில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேசிய தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகம், ரெயில்வே பணிமனைகள் உள்பட 6 கோட்டங்களில் இதுவரை 969 ரெயில்வே ஊழியர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இவர்களில் 606 பேர் பூரண குணமடைந்து உள்ளனர் என்றும். 363 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் கூறினார். மேலும், 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விழாவில் ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பிரேந்திரகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் சென்னை ரெயில்வே கோட்டத்தில் கோட்ட மேலாளர் பி.மகேஷ் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது கொரோனாவுக்கு பிளாஸ்மா தானம் அளித்த 32 ரெயில்வே பாதுகாப்பு படையினரை அவர் பாராட்டினார்.