நாடு முழுவதும் கொரோனோ வார்டாக 813 ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றது.

கொரோனோ தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ரயில்வேயால் கொரோனோ வார்டுகளாக மாற்றப்பட்டுள்ள பழைய ரயில் பெட்டிகளை பயன்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

இதுதொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ரயில்வே மூலம் 5,231 பெட்டிகள் கொரோனோ வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த பெட்டிகளைப் பயன்படுத்த பல்வேறு மாநில அரசுகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன.

அதன்படி, இதுவரை புதுடெல்லி - 503, உத்தரபிரதேசம் - 270, பிஹார் - 40 எனமொத்தம் 813 பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், மாநில அரசுகள் விருப்பம் தெரிவித்தால், கூடுதல் பெட்டிகளை வழங்கவும் ரயில்வே தயாராக உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.